தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி பண்டிகை அனைத்து இந்து பண்டிகைகளிலும் மிகப்பெரியது . தீபாவளி வார்த்தை என்பது இரண்டு வார்த்தைகளின் கலவையாகும், தீபம் மற்றும் ஒளி என்று பொருள்படு
1. பசுமையான நினைவுகளுடனும், பசுமைப் பட்டாசுகளுடனும் இந்த நாளைக் கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
2. உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்துபோக, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, இந்த தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியுடன் இருக்க, இனிய தீபாவளி வாழ்த்துகள்!
3. இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்க இறைவனை வேண்டுவோம்! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

4. நண்பர்களுக்கு புன்னகையும், எதிரிகளுக்கு பூக்களையும் பரிசளிக்கும் இனிய நாள்! இந்நாள்! தீபாவளி நல்வாழ்த்துகள்!

5. வருடத்தில் ஒரு நாள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்… தீபாவளி! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

6. சிறுமைகள் தீர்ந்து மனையெங்கும் மங்களம் தழைக்கட்டும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!
7. தீபாவளி இனிப்பாக இணையட்டும் இதயங்கள்! சரவெடியாய் பொசுங்கட்டும் பிரிவினைகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
8. நம் தேசத்தில் விண்ணும், மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால், அது தீபாவளி தான்! தீபாவளி வாழ்த்துகள்!

9. தீமை இருள் விலக்கி, தித்திக்கும் நினைவுகளைக் கொண்டுசேர்க்கும் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுவோம்! திஞ்சுவைப் பல காரங்கள் பரிமாறுவோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

10. வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும் பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
11. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும்!

12. ஒவ்வொரு இல்ல வாசலிலும்
ஒளிரும் தீபம் வரிசையிலே
குதூகலம் படைக்கும் தீபாவளி
அனைவர் வாழ்வில் ஏற்றும் தீப ஒளி!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
13. புத்தாடையுடனே புன்னகையும்
இனிப்புடன் மகிழ்ச்சி பரிமாற்றங்களும்
விடியலின் முன்னே ஆரம்பம்
வெடிச்சத்த முடன் திருநாள் ஆனந்தம்!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
14. பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் எங்கும் எரிகின்றது,
இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது,
வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது,
எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது,
நாம் அனைவரும் கூடி இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவோம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
15. ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன்
நோய்நொடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீப திருநாளில் வாழ்த்துகிறோம்!